தேர்தல் சிறப்பு செய்திகள்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று அதிகாரபூர்வ முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆரம்பித்து சில மாதங்களிலேயே நடந்த சட்டமன்ற தேர்தல்.ஆனால் சுனாமி போல் அனைத்து கட்சிகளையும் சுருட்டி, மண்ணை கவ்வ வைத்து பெரும்பான்மையை வென்றுள்ளது
சூப்பர் ஸ்டாரின் பச்சை தமிழர் கட்சி.
சீட் நிலவரம்
தேர்தல் நடந்தது. 234
முடிவுகள் அறிவிக்கப்பட்டவை. 234
பச்சை தமிழர் கட்சி (ptk) 232
திராவிட முன்னேற்ற கழகம் (dmk) 1
அ இ அதிமுக (aiadmk) 1
கூடுதல் 234
அதிமுக தலைவர் ஜெயலலிதா ஆண்டிபட்டி தொகுதியிலும், திமுக தலைவர் கலைஞர் சென்னை துறைமுகம் தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
தேர்தல் முடிவுகள் குறித்து பல்வேறுவிதமான கருத்துகள் வெளிவந்தவண்ணம் உள்ளன.
நமது சிறப்பு நிருபர் தரும் பரபரப்பு செய்திகள் இதோ உங்களுக்காக.
தேர்தல் முடிவுகள் முழுவதுமாக வெளிவந்த பின் கவர்னரை சந்தித்து பேசிய உடன் சூப்பர் ஸ்டார் இமயமலைக்கு கிளம்பி சென்றுவிட்டார். கூடவேமந்திரிசபை பட்டியலையும் கையோடு கொண்டு சென்று இருப்பதாகவும் பாபாவின் ஒப்புதல் பெற்ற பின்னரே மந்திரிசபை இறுதிவடிவம் பெறும் என்று கூறப்படுகிறது. முக்கிய விஷயம் பாபா அனுமதி கிடைத்தால் மட்டுமே முதலமைச்சர் பதவியை சூப்பர் ஸ்டார் ஏற்று கொள்வார்என்றும் ஒப்புதல் கிடைக்காத பட்சத்தில் சத்யா நாரயனாவோ அல்லது அவரது சகலபாடி y .g .மகேந்திராவோ முதலமைச்சர் ஆகவாய்ப்புகள் அதிகம் என்று ரகசிய தகவல்கள் கசிகின்றன.
தேர்தல் முடிவுகள் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களின் கருத்துக்கள்.
முன்னாள் முதல்வர் திமுக தலைவர் மு.கருணாநிதி
சூடு,சுரணை,மானம்,வெட்கம்,ரோசமில்லாத,நன்றி என்பது அறவேயில்லாத, தமிழ்நாட்டின் செம்மறியாட்டு கூட்டம் தன் புத்தியை மீண்டும் ஒரு முறை காட்டி தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொண்டுள்ளதையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. கழக ஆட்சி மீண்டும் அமைந்தவுடன் சாம்சங் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள 42 இன்ச்சு HD LED டிவி வீட்டுக்கு ஒன்றும் கூடவே டாடா நிறுவனத்தின் நானோ கார் ஒன்றும் இலவசமாக வழங்க எண்ணியிருந்தோம். ஐயகோ தமிழா நீ ஏமாந்த சோணகிரி என்பதைஉலகிற்கு தெளிவாக காட்டிவிட்டாயே என்று கூறியுள்ள அவர் மேலும்,மராத்தியமண்ணில்பிறந்திருந்தாலும்,கர்னாடகமண்ணில்
வளர்ந்திருந்தாலும்,அன்புத்தம்பி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஒரு பச்சை தமிழர் என்பதை நான் நூறுவிழுக்காடல்ல இருநூறு விழுக்காடு ஏற்று கொள்வதாகவும் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.மேலும் அவர் தமது அறிக்கையில் செல்வபுரியாம் சிங்கப்பூரில் பலகாலம் நாட்டின் பிரதமராக இருந்த அன்பு நண்பர் லீ குவான் யூ அவர்களை அவரது வயது மற்றும்
முதிர்ந்த அனுபவம் காரணமாக மதியுரை அமைச்சர் என்ற ஒரு பதவியை உருவாக்கி அமரவைத்து அழகு பார்ப்பது போல அன்புத்தம்பி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தம்மையும் மதியூக மந்திரி என்ற ஒரு புதிய பதவியை உருவாக்கி அதில் அமரவைத்து அறிவுரை பெறுவார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர் அதிமுக கட்சி தலைவர் ஜெயலலிதா
சிலமாதங்களுக்கு முன்னாள் ரிலீசாகி இன்றுவரை ஓடிகொண்டிருக்கும் எந்திரன் படம் வந்தபோதே தமக்கு சந்தேகம் ஏற்பட்டதாக கூறியுள்ள அவர், வாக்கு இயந்திரங்களும் ரோபோ போன்றதே என்றும் வாக்கு இயந்திரங்கள்
மொத்தமாக வைக்கப்பட்டிருந்த இடத்திற்குள் கள்ளத்தனமாக நுழைந்த ரஜினி அனைத்து இயந்திரங்களின் புரோகிராம்களையும் தனது கட்சிக்கு சாதகமாக மாற்றி அமைத்துவிட்டார். அதனாலேயே இப்படி ஒரு வெற்றியை பெற முடிந்தது என்றும் நாளை இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும் என்று அறிவித்துவிட்டு கொடநாடு எஸ்டேட்டிற்கு ஓய்வு எடுக்க சென்றுவிட்டார். ஒன்பது விதமான யாகங்களைஅம்மா செய்யப்போவதாகவும் எப்படியும் நீதிமன்றம் தங்கள் கட்சிக்கு
சாதகமாகவே தீர்ப்பு தரும் என்று அதிமுக தொண்டர்கள்
உற்சாகத்துடன் பேசிக்கொண்டனர்.
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ்.
ஏற்கனவே குடிகாரர்களின் மாநிலமாக விளங்கிய தமிழ்நாடு இப்போது விசிலடிச்சான் குஞ்சுகளின் மாநிலமாகவும் மாறிவிட்டது என்பதையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன்றன என்று தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ராமதாஸ். மகன் அன்புமணியை ஹீரோவாக போட்டு தாம் தயாரிக்கும் படத்திற்கு நாளை பூஜை போடுவதாகவும் பத்திரிகையாளர்கள் முழு ஒத்துழைப்பை தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்
முதலில் பத்திரிகையாளர்களை சந்திக்க மறுத்த விஜயகாந்த் பின்னர் அரைமனதுடன் சந்தித்தார். கேள்விகளுக்கு பதிலளிக்க ஆரம்பித்த விஜயகாந்த் முழுவதும் தெலுங்கிலேயே பேசினார். பத்திரிகையாளர்கள் குழம்பிப்போய் ஏன் என்று கேட்டபோது தேர்தல் தந்த கடுமையான அதிர்ச்சியில் தமக்கு தமிழே மறந்து போய் விட்டதாகவும் எனவேதான் வீட்டில் பேசும்
தெலுங்கிலேயே பதிலளிப்பதாகவும் இரண்டு நாட்களில் சகஜ நிலைக்கு திரும்பியபின் தமிழில் பேட்டியளிப்பதாகவும் உறுதி அளித்துள்ளார்.
மதிமுக தலைவர் வைகோ
வைகோவை பத்திரிகையாளர்கள் யாரும் தொடர்பு கொள்ள முடியவில்லை. வைகோவின் உதவியாளர் கூறும்போது, தேர்தல் முடிவு வந்த நிமிடத்திலிருந்து தனியறையில் கதவை அடைத்துக்கொண்டு அன்ன ஆகாரமின்றி கதறி அழுது அரற்றுவதாகவும் ஒரு வாரத்திற்கு பேட்டி கொடுக்கும் வாய்ப்பே இல்லை என்றும் உறுதியாக கூறிவிட்டார்.
காங்கிரஸ்,கம்யூனிஸ்ட் மற்றும் இதர கட்சி தலைவர்கள் ஏற்கனவே தங்கள் லட்டர் பேடிலேயே தாங்கள் ஐந்து வருட அரசியல் துறவறம் மேற்கொள்வதாகவும் யாரும் தங்களை தேட வேண்டாம் என்றும் அனைத்து பத்திரிகை அலுவலகங்களுக்கும் செய்தி அனுப்பி விட்டார்கள்.
ரஜினி ரசிகர்கள்
திருவிழா கூட்டமாய் கூடியிருந்த ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில்
ஆடிப்பாடி கொண்டிருந்தனர்.கூட்டத்திலிருந்த ரஜினி முருகனும்,
ரஜினி முகமதும்(இவர் ஏற்கனவே கஜினி முகமதாக இருந்தவர்)
கூறும்போது வேண்டுதலை நிறைவேற்ற இமயமலை பாபா குகை வரை முட்டி போட்டு நடந்து சென்று திரும்பிவர போவதாகவும் அதற்கு எப்படியும் ஐந்து அல்லது ஆறு வருடம் ஆகும் என்றும்,ஆனால் அதைப்பற்றி தங்களுக்கு கவலை இல்லையென்றும் ஏனெனில் அடுத்து அமைய போவதும்
சூப்பர் ஸ்டாரின் ஆட்சியே என்றும் நம்பிக்கையோடும் தெரிவித்தனர்.
ஹரியானா தேர்தல் முடிவு: எடுத்துரைக்கும் பாடம் என்ன?
10 hours ago